Ads (728x90)

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. மாலை 5 மணிக்கு டெல்லியில் நடக்கும் முதல் போட்டியில் கொலம்பியா அணியை எதிர்த்து ஜெர்மனி அணி மோதுகிறது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இதுவரை 4 முறை அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறிய ஜெர்மனி அணியால் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடிந்ததில்லை. இந்த முறையாவது வென்றாக வேண்டும் என்ற லட்சியத்தில் அந்த அணியினர் களம் இறங்குகின்றனர். அதே நேரத்தில் கொலம்பியா அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது. 2009-ம் ஆண்டில் அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறியதே இந்த தொடரில் கொலம்பியா அணியின் அதிகபட்ச சாதனையாகும்.

டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் பராகுவே அணியை எதிர்த்து அமெரிக்கா ஆடுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget