Ads (728x90)


அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தத் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 18.3 ஓவர்களில் 102 ரன்களுக்கு சுருண்டது. குணதிலாக 18, சமரவிக்ரமா 23, பிரியஞ்சன் 12, பிரசன்னா 23 ஆகியோர் மட்டமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். முனவீரா 0, உடவாட்டே 8, பதிரனா 4, ஷனகா 0, பெரேரா 6, உதனா 0, சஞ்ஜெயா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

103 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பஹர் ஸமான் 6, சேஷாத் 22, பாபர் அசாம் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷோயிப் மாலிக் 42, முகமது ஹபீஸ் 25 ரன்கள் சேர்த்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் , டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே 3-வது டி20 ஆட்டம் நடைபெறும் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்துக்கு 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget