Ads (728x90)

பாரிஸ்பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பிரணாய் 21-11, 21-12 என்ற நேர் செட்டில் டென் மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனை எளிதாக வீழ்த்தினார். 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி, ஸ்ரீகாந்த் 21-19, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் வாங்க் விங் ஹி வின்செட்டை எளிதாக தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 13-21, 17-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டாவிடம் தோல்வியடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் 32-வது இடத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஒரு மணி நேரம் போராடி தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் பீட்டர்சன், கோல்டிங் ஜோடியை 22-20, 12- 21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சயாகாவை வீழ்த்தினார்.

நேற்று நடைபெற்ற கால் இறுதியில் சிந்து, சீன வீராங்கனை சென் யூபியை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-14, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற 2-வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 9-21, 21-23 என்ற நேர் செட்டில் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 16-21, 14-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் மிசாகி மட்சுடோமோ, அயகா தகாஹாஸி ஜோடியிடம் தோல்வியடைந்தது

Post a Comment

Recent News

Recent Posts Widget