Ads (728x90)

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.O படம் உருவாகி உள்ளது. ஹாலிவுட் தரத்தில், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று பிரமாண்டமாய் நடக்கிறது.

2.O படத்தின் புரொமோஷனுக்காக பணத்தை வாரி இறைத்து வருகிறது லைகா நிறுவனம். இரண்டு மாதங்களுக்கு முன்பே உலகம் முழுக்க 2.O படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக பலூனை பறக்கவிட்டது.

இந்நிலையில் துபாயில் புர்ஜ் பார்க்கில் இன்று மிகப் பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடக்கிறது. இதற்கு மட்டும் சுமார் ரூ.12 கோடி செலவு செய்து இருக்கிறதாம் லைகா. ஹாலிவுட்டையே வியக்க வைக்கும் அளவுக்கு புரொமோஷன் நடக்கிறது.

விமானம் மூலம் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இறங்குவதும், வானில் அந்தரத்தில் தொங்கி விளம்பர படுத்துவதும் என துபாய் முழுக்க 2.0 விளம்பரம் தான் அதிகம் இடம் பெற்றுள்ளது.
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் திரையரங்க கட்டணம் பிரச்சனைகள், ஜிஎஸ்டி பிரச்சனை... என இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி எப்படி அந்த நானூறு கோடி ரூபாய் எடுக்க போகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget