Ads (728x90)

இலங்கையில், அனைத்து பேருந்துகளையும் GPS தொழில்நுட்பத்தின் ஊடாகக் கண்காணிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதுவரையில் 2000 பேருந்துகளுக்கு GPS தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர். பீ. சந்திரசிறி தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பேருந்துகளுக்கும் தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேருந்து போக்குவரத்தை கண்காணித்தல்இ அதனை வினைத்திறனாக்குதல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆர்.பி.சந்திரசிறி குறிப்பிடார்.

இதன் மூலம் பயணிகளுக்கு தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதே நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்துதல் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget