Ads (728x90)

இந்தோனேஷியாவில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில்,  47 பேர் இறந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் தலைநகர், ஜகார்தாவின் புறநகர் பகுதியில், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

வணிக வளாகங்கள் நிறைந்த இந்த பகுதியில், நேற்று, திடீரென, பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. பட்டாசு ஆலை, தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்; அடுத்த கட்டடங்களுக்கும், தீ பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில், பட்டாசு ஆலை ஊழியர்கள், ௪௭ பேர், உடல் கருகி இறந்தனர். அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், 'பட்டாசு தயாரிப்பின் போது, விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என, சந்தேகிக்கிறோம். முழுமையான விசாரணைக்கு பின் தான், உண்மையான காரணம் தெரியும்' என்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget