மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்பது தான் நடிகர் அமீர்கானின் கனவு என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கானிடம் இது பற்றி கேட்கப்பட்டது. பாகுபலி டைரக்டர் ராஜமவுலியும் மகாபாரதத்தை படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறியிருக்கிறாரே என அமீர்கானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமீர் கான், நான் ராஜமவுலியின் மிகப் பெரிய ரசிகன். ஒருவேளை அவர் மகாபாரதத்தை படமாக எடுத்தால், அந்த படத்தில் நான் கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க விரும்புவேன் என்றார்.
நடிகர் அமீர்கான் தற்போது சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 19 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.
Post a Comment