பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன். லூசியா படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்ருதி ஹரிகரன், தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன் படங்களில் நடித்தார். தற்போது ரா ரா ராஜசேகர் படத்தில் நடித்து வருகிறார்.ஸ்ருதி தற்போது கலாத்மிகா என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தெஸ்லா என்ற படத்தை தயாரிக்கிறார். வினோத் ராஜ் இயக்குகிறார். இதில் ஸ்ருதி ஹரிகரன் 7 வேடங்களில் நடிக்கிறார். இந்த 7 வேடங்களின் தோற்றத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்மிட்டிருக்கிறார்.
"இது ஒரு பெண்ணை மையப்படுத்திய அறிவியல் சார்ந்த திரில்லர் படம். கன்னடத்தில் மட்டுமே தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். எனக்கு மட்டுமல்ல கன்னடத்திற்கும் இந்தப் படம் புதிதாக இருக்கும்" என்கிறார் ஸ்ருதி ஹரிகரன்.
Post a Comment