திடீர் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், வானூர்தி நோயாளர் காவு வண்டிச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.உரிய பாதுகாப்பு முறைமை இல்லாத காரணத்தால் உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதனால் நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அவசர விபத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வானூர்தி நோயாளர் காவு வண்டிச் சேவையை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment