
ருத்தேனியம்-106 பிளாட்டினம் வகை உலோகத்தின் ஒரு பகுதி. கடினமான, மினுமினுக்கும் சில்வர் - வெள்ளை உலோகம். இதன் உருகுநிலை 2300 முதல் 2450 டிகிரி செல்சியஸ். இது உலோகத்தில் கலப்பு பொருளாகவும், தொழிற்சாலை பயன்பாட்டில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ருத்தேனியம்-106 என்பது ஒரு ஐசோடோப். இதன் அணுக் கருவில் பல நியூட்ரான்கள் இருக்கும். கண்ணில் ஏற்படும் கட்டிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது. இது ரேடியோஸ்டோப் தெர்மோ எலக்ட்ரிக் ஜெனரேட்டர் எனவும் அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோள்களுக்கு தேவையான மின்சக்தி அளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய வளிமண்டலத்தில் கதிரியக்க துகள்கள் கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஜனவரியில் ஐயோடின்-131 கதிரியக்க துகள்கள் ஐரோப்பிய வளிமண்டலத்தில் இருந்ததை காற்று தர கட்டுப்பாட்டு மையங்கள் கண்டுபிடித்தன. ஐயோடின்-131 கதிரியக்க துகளின் ஆயுட்காலம் வெறும் 8 நாட்கள் என்றாலும், அதிக கதிரியக்க தன்மை கொண்டது என்பதால் இதனால் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஐரோப்பிய வளிமண்டலத்தில் கண்டறியப்பட்ட இந்த கதிரியக்க துகள்களின் அளவு மிகவும் குறைவு என்பதால், மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பில்லை. அணு மின் உலைகளில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், இந்த கதிரியக்க துகள்கள் வெளியேறியிருக்க முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் எங்கிருந்து இந்த கதிரியக்க துகள்கள் வெளிப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.
Post a Comment