
வயதானவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்சினை வரும். அளவுக்கு அதிகமான அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கண், இறுதியில் செயலிழந்துவிட்டது. நிதித்துறையில் வேலை செய்துவரும் வூ, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஸ்மார்ட்போனில் விளையாட ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கூட விளையாடுவார். இதனால் கண்களுக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. இவரது பார்வையை மீட்க முயற்சி செய்துவருகிறோம். சிறிய முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் ஃப்ளாஷ் லைட் அடித்தபோது அவரால் உணர முடியவில்லை.
கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை 60 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள். அடிக்கடி பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள். கண்களுக்குப் பயிற்சி கொடுங்கள். பார்வை மிக முக்கியம்” என்கிறார் வூவின் கண் மருத்துவர். “விடுமுறை நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்மார்ட்போனில் விளையாடுவேன். சில நேரங்களில் சாப்பிடுவது கூட இல்லை. சிறிது ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன். இரவு 2 மணிக்கு மேல் களைப்பில் தூங்கிவிடுவேன். என்னுடைய தவறு இப்போது புரிகிறது” என்கிறார் வூ.
அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்
Post a Comment