
ரஷ்யாவில் 21ஆவது பிபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதன் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ், ஹங்கேரி, பெல்ஜியம் உட்பட 54 நாடுகள் 9 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும்.
இதன் 'ஐ' பிரிவு லீக் போட்டியில் ஐஸ்லாந்து – கொசோவா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஐஸ்லாந்து அணி 2–0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று வரலாற்றில் முதன்முறையாக கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றது.
Post a Comment