Ads (728x90)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி.

இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது.

மாறாக, 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழுமையாக ஒரு டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்திருக்கிறது பாகிஸ்தான் அணி.

தற்போது, இலங்கை அணிக்கு முன்னதாக ஐந்தாம் இடத்தில் அவுஸ்திரேலியா 97 புள்ளிகளுடன் இருக்கிறது.

இந்திய அணி 125 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget