ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வியட்நாமில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனைகள் தேர்வு கடந்த 3 நாட்களாக டெல்லியில் நடைபெற்றது.இதில் சீனியர் வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். 5 முறை உலக சாம்பியனான 34 வயதான மேரிகோம் இம்முறை 48 கிலோ எடைப் பிரிவில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம் வென்றுள்ள 35 வயதான சரிதா தேவி 60 கிலோவுக்கு பதிலாக 64 கிலோ எடைப் பிரிவில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
இவர்களுடன் இந்திய அணியில் நீரஜ், சிக் ஷா, சோனியா, பவித்ரா, லவ்லினா, பூஜா ராணி, சவீட்டி போரா, சீமா பூணியா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
Post a Comment