கேங்ஸ்டார் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத், தமிழில் தாம் தூம் என்ற படத்திலும் நடித்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ள கங்கனா, குயின் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சுதந்திரத்திற்காக போராடிய ஜான்சி ராணியாக நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க பல கோடிக்கு சம்பளம் வாங்கும் கங்கனா, மும்பை பாந்த்ரா பகுதியில், ஒரு ஆடம்பர பங்களா வாங்கியிருக்கிறார். தற்போது இதே பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். இதே பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்கிற அவரது கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது
. 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பங்களாவில் நீச்சல்குளம், மினி தியேட்டர், கார்டன் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இதன் விலை 20 கோடியே 7 லட்சம் ரூபாய். பத்திர பதிவு செலவு மட்டும் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய். விரைவில் புதிய வீட்டிற்கு குடிபோகும் கங்கனா, தற்போதுள்ள வீட்டை தனது தயாரிப்பு அலுவலகமாக மாற்ற இருக்கிறாராம்.
Post a Comment