Ads (728x90)

மம்முட்டி நடித்து, சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக பள்ளி செல்லும் எட்டு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அவரது மகளாக பேபி அனிகா நடித்திருந்தார். இந்தப்படத்தில் நயன்தாரா, மம்முட்டியின் மகனோடும் தனது மகளோடும் ஆடிப்பாடுவதாக இடம்பெற்ற 'ஐ லவ் யூ மம்மி' என்கிற பாடல் படம் வெளியான சமயத்தில் சூப்பர் ஹிட்டாக ஆனது.

படம் வெளியாகி இரண்டு வருடங்களாகி, இப்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த 'ஐ லவ் யூ மம்மி' பாடல் சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் இந்தப்படாலை இதுவரை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப்பாடல் வெளியான சமயத்தில் இந்தப்பாடல் அப்படியே 'ஹலா அல் டர்க்' என்கிற ஒரு அராபியன் பாடலின் அப்பட்டமான காப்பி என்கிற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget