Ads (728x90)

சைப் அலிகான் தற்போது தனது புதிய படமான செப் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சைப் அலிகானின் மகள் சாரா அலி கான், கேதார்நாத் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், மகள் நடிக்கும் படம் பற்றி சைப் அலிகானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சைப் அலிகான், சாரா நடிக்கும் படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அவர் நன்றாக நடிப்பார் என எனக்கு தெரியும். ஏன் என்றால் அவர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். கடின உழைப்பாளி, அன்பாக பழகக் கூடியவர். அவர் எவ்வளவு அற்புதமான பெண் என்பதை கேமிரா மூலம் இப்படம் எடுத்துக் காட்டும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget