Ads (728x90)

2017-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளர்களிடம் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிவியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்துள்ளனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் அனைவருமே வெள்ளை இனத்தை சேர்ந்த ஆண்கள் .

இயற்பியல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்து ஏற்கனவே உலகளாவிய நிலையில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உடலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்க முறைகள் குறித்த ரகசியத்தை வெளிகொணர்ந்த மருத்துவர்களின் குழுவுக்கு உடற்கூற்றியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளில் அறிவியல் துறையில் இந்த ஆண்டும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

"சிறந்த தனிநபர்களின் தனித்துவமான பங்களிப்புகள் ஒன்றுடன் ஒன்று இணக்கமானவை" என்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று இயற்பியலாளர்கள் பற்றி ஆஸ்ட்ரோனமர் ராயலின், சர் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.

இன்னும் இதுபோன்ற முன்மாதிரி ஆராய்ச்சிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் உற்சாகப்படுத்துவதாக இருந்தபோதிலும், மாற்றம் அவசியம் என்று பல விஞ்ஞானிகள் நினைப்பது தெளிவாக தெரிகிறது.

1901ஆம் ஆண்டில் இருந்து நோபல் பரிசுகள் வழங்கப்பட்டாலும், அறிவியலின் மூன்று பிரிவுகளிலும் சேர்த்து இதுவரை 17 பெண்கள் மட்டுமே நோபல் பரிசு பெற்றுள்ளார்கள்.

இயற்பியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள மொத்தம் 206 பேரில், மேரி க்யூரி (1903) மற்றும் மரியா கோப்பெர்ட் மஏயர் (1963) என இருவர் மட்டுமே பெண்கள்.

அதேபோல் வேதியியல் துறையிலும் பெண்கள் மிகவும் சொற்பமான முறையே கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

`எந்தவொருத் துறையிலும் மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசை பகிர்ந்தளிக்க முடியாது, நோபல் பரிசு மரணத்திற்குப் பிந்தைய பரிசாக அறிவிக்கப்படுவதில்லை, மேலும் பரிசுக்காக பரிசீலிக்கப்படுபவர்களின் பெயர் பட்டியல்கள் 50 ஆண்டுகளுக்கு ரகசியமாக வைக்கப்படுகின்றன`.

நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட தற்போதும் கடைபிடிக்கப்படும் மேற்கூறிய இந்த விதிமுறைகள் பற்றி ட்விட்டரில் பல்வேறுவிதமான கருத்துகளை கூறியுள்ளனர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் வெரா ரூபின், லிஸே மெய்ட்னர் மற்றும் ஜோஸ்லின் பெல் பர்னல் ஆகிய பெண்கள் பரிசு பெற தகுதியுள்ளவர்கள் என கருத்து கூறப்பட்டுள்ளது.

பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியான ரூபின், கருந்துளைகளில் மேற்கொண்ட ஆராய்ச்சி, 2016ஆம் ஆண்டு அவர் மரணமடைந்ததால் இப்போது அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியற்றதாகிவிட்டது.

மெய்ட்னருடன் நீண்ட காலம் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஓட்டோ ஹானுக்கு 1944ஆம் ஆண்டு வேதியியல் துறையில் அணுக்கரு பிளவுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் மெய்ட்னருக்கு பரிசு பகிர்ந்து அளிக்கப்படவில்லை. அதற்கு முந்தைய மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு பரிசு ஆண்களுடன் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

பெர்னெல் மற்றும் சியான்-ஷிங் வு ஆகிய இரு இயற்பியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டாலும், இவர்கள் இருவரின் பெயரும் சேர்க்கப்படவில்லை.

நோபல் பரிசு, வாழ்நாள் சாதனை விருதாக கருதப்படுவதால், இந்தப் பரிசைப் பெறுபவர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையும், வேலையும் சிறப்பிக்கப்பட்டு இப்பரிசால் அங்கீகாரம் பெறுகின்றன. மேலும் பொருளாதார ரீதியாக பெரிய அளவு பயனடையாத அவர்கள் சர்வதேச அளவில் அறியப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் சில பெண்களே நோபல் பரிசு பெற்றிருந்தாலும், மருத்துவத்துறை சற்றே பரவாயில்லை, 12 பெண்கள் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.

ஆலிஸ் முன்ரோ, டோரிஸ் லெஸிங் மற்றும் டோனி மோரிசன் என இலக்கியத்துறையிலும் பெண்கள் ஒன்றும் பெரிய அளவில் நோபல் பரிசால் கௌரவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜப்பானிய-பிரிட்டிஷ் ஆண் எழுத்தாளர், காஷோ இஷிகோரோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget