Ads (728x90)

எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது வடகொரியாவுக்கு எதிராக ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த 'ஒன்றேயொன்று' என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

ட்வீட் ஒன்றில் ட்ரம்ப் இது பற்றி கூறிய போது, ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர்.

உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை, ஒப்பந்தங்கள் அதன் மை காயும் முன்பே மீறப்படுகின்றன. அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை முட்டாளாக்குகின்றனர். எனவே மன்னிக்கவும், வடகொரியாவுக்கு எதிராக ஒரேயொரு விஷயம்தான் சரிப்பட்டு வரும்'' என்றார்.

ஆனால், ட்ரம்ப் கூறும், 'சரிப்பட்டு வரக்கூடிய ஒரே விஷயம்' ராணுவ நடவடிக்கைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள், ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆகியவை உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவும், வடகொரியாவும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி அறிக்கை விடுத்துக் கொண்டிருப்பது வழக்கமாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget