Ads (728x90)

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­க­கத்­தின் தலை­வ­ரி­னது என்று தெரி­வித்து இலங்கை அர­சால் காட்­டப்­பட்ட சட­லத்­தைப் பார்த்­துத் தானும் தனது சகோ­தரி பிரி­யங்கா வதே­ரா­வும் வேத­னைப்­பட்­டார்­கள் என்று தெரி­வித்­தார் காங்­கி­ரஸ் கட்­சி­யின் துணைத் த­லை­வர் ராகுல் காந்தி.

இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தில் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்ளார் ராகுல் காந்தி. குஜ­ராத்­தின் வதோ­த­ரா­வில் நேற்­று­முன்­தி­னம் தொழி­ல­தி­பர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

பங்­கேற்­ற­பா­ளர்­கள் ராகுல் காந்­தி­யி­டம் சில கேள்­வி­களை முன்­வைத்­த­னர். இலங்­கை­யில் இறு­திப் போரில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­ததை நீங்­கள் எப்­படி உணர்ந்­தீர்­கள் என்­றும் ஒரு கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இதற்­குப் பதி­ல­ளித்த ராகுல் காந்தி, ‘‘பிர­பா­க­ர­னின் சட­லத்­தைப் பார்த்து நானும் எனது சகோ­தரி பிரி­யங்­கா­வும் மிக­வும் வேத­னை­ய­டைந்­தோம். பிர­பா­க­ர­னின் குடும்­பத்­தி­னர் கொல்­லப்­பட்­ட­தால் துய­ர­ம­டைந்­தேன். மற்­ற­வர்­க­ளின் துய­ரங்­க­ளில் பங்­கு­கொள்­வ­து­தான் காந்தி குடும்­பத்­தின் பாரம்­ப­ரி­யம்’’ என்று குறிப்­பிட்­டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget