
மேற்குறிப்பிட்ட மூன்று மாகாண சபைகளினதும் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதேபோன்று தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் வேட்பாளராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான பனிப்போருக்கு மத்தியில் கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளில் இரண்டில் முதலமைச்சர்களாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்கவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குறித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தம்வசம் இழுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment