உ.பி.,யில், குழந்தைகள் பலியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, கோரக்பூர் மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன.உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள, கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 73 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, குழந்தைகள் இறப்பை தடுக்க, உ.பி., அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அரசு மருத்துவமனைகளில், போதிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மீண்டும், 16 குழந்தைகள் இறந்துள்ளன.
இது குறித்து, அந்த மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: கோரக்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சமீபத்தில், 16 குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல; அது போலவே, உரிய சிகிச்சையும் வழங்கி உள்ளோம். அந்த குழந்தைகள், கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment