Ads (728x90)

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 3-0 என முன்னிலை வகிக்க, கடைசி போட்டி ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது.

கிறிஸ் கேல் 40 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), கைல் ஹோப் 33, ஷாய் ஹோப் 72 (95 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சாமுவேல்ஸ் 32, கேப்டன் ஜேசன் முகமது 25, அம்ப்ரிஸ் 38*, நர்ஸ் 31* ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிளங்கெட் 2, ஜேக் பால், டாம் கரன், ரஷித், மொயீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ தொடக்க ஜோடி 21.2 ஓவரில் 156 ரன் சேர்த்தது. ராய் 96 ரன் (70 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து 38 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து எளிதாக வென்றது. பேர்ஸ்டோ 141 ரன் (114 பந்து, 17 பவுண்டரி), ரூட் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பேர்ஸ்டோ ஆட்ட நாயகன் விருதும், மொயீன் அலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget