
அவருடன் மாவட்டச் செயலக அதிகாரிகள் குழுவினரும் சென்றிருந்தனர். அத்துடன் திணைக்களங்களின் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கே மாவட்டச் செயலாளர் அங்கு நேரடியாகச் சென்றிருந்திருந்தார்.
நெடுந்தீவுப் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் பலரும் மாவட்டச் செயலாளருக்குச் சுட்டிக்காட்டி யிருந்தனர். அவரது இந்தத் திடீர்ப் பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது ,யாழ்ப்பாண மாவட்டந்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சில பிரதேச செயலகங்களில் நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவும் ஒன்று.
அந்தப் பிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாகத் தேவைகள், குறைகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை எமது பிரதேச செயலாளர் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார். இதனால் அவற்றைப் பட்டியலிட்டோம். அது ஒருபெரிய பட்டியலாகவே இருந்தது. தீவின் தேவைகளில் நிவர்த்தி செய்யவேண்டியதை முன்னுரிமைப்படுத்தும் பணியை மேற்கொண்டோம்.
ஆனாலும் ஓரு சந்தேகம் இருந்தது. இதில் எதனை முன்னுரிமைப்படுத்து வது என்பதே அது. அதனை நாம் தீர்மானிப்பதைவிடவும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அந்தப் பணியைச் செய்யும் நாம் அவற்றை தேவைகளை நேரில் பார்யைிட வேண்டும் என முடிவெடுத்தோம்.
அதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் இருந்து ஓர் அணியும், சகல திணைக களங்கள் சார் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து நேரில் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய நாம் அங்கு சென்றோம். பிரச்சினைகள் – தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பிரதேச செயலாளரிடமிருந்தும் அதற்கான தரவுகளையும் விவரங்களையும் பெற்றோம். 2017ஆம் ஆண்டின் திட்ட முன்னேற்றங் கள் தொடர்பிலும், 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளவுள்ள கைத்தொழில், விவசாயம் , கடல்வளம் ஆகிய திட்டங்கள் நவம்பர் மாதமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது – என்றார்.
Post a Comment