Ads (728x90)

மோகன்லால் சினிமாவில் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகப்போகின்றன. இதுவரை அவர் நடிக்காத கேரக்டர்கள் என கணக்கிலெடுத்து பார்த்தால் அவற்றின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். அந்தவகையில் அவர் இதுவரை யானைப்பாகன் கேரக்டரில் நடித்ததே இல்லை. முதன்முறையாக தற்போது புதிய படம் ஒன்றில் பாகனாக நடிக்க இருக்கிறார் மோகன்லால். இந்தப்படத்தை பிரபல சீனியர் இயக்குனர் பத்ரன் இயக்கவுள்ளார்.

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட்டான 'ஸ்படிகம்' படம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை மோகன்லாலை வைத்து இயக்கியவர் தான் இயக்குனர் பத்ரன். கடந்த வருடம் மோகன்லால் நடித்து வந்த 'வெளிப்பாடிண்டே' புஸ்தகம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்திருந்தார் இயக்குனர் பத்ரன். அப்போதே, மோகன்லாலை வைத்து படம் இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட அந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்தப்படம் 'புலி முருகன்' பாணியில் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாக இருக்கிறதாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget