கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடத்தல் தலைவன் பல்சர்சுனில், முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. திலீப் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கில் இன்று அல்லது நாளை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். தற்போது கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாகவும், நடிகர் திலீப் 11வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் போலீசார் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிக்கையில் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்து வரும் ஆலுவா போலீஸ் சூப்பிரண்டு ஏ.வி.ஜார்ஜ் இதனை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடத்தப்பட்ட நடிகைக்கும், பல்சர் சுனிலுக்கும் நேரடி பகை எதுவும் இல்லை. இந்த கடத்தல் மூலம் யாருக்கு லாபமோ அவரே முதல் குற்றவாளி.
அவரே இந்த கடத்தலுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்து சதி திட்டம் தீட்டியவர். அவரை முதல் குற்றவாளியாக சேர்க்க தீர்மானித்துள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் குறிப்பிடுவது திலீப்பைத்தான் என்பதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் திலீபுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment