
இது தொடர்பில் எமக்கு மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு மகிந்த அணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்
டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்ததாவது:
தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிப்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பிலுள்ள விடயமல்ல. அதனைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே மேற்கொள்ள வேண்டும்.
எனினும் குறித்த சம்பிரதாயத்துக்குப் புறம்பாக அரசியல் தலைவர்கள் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவிக்கும் கலாசாரம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.
கடந்த இரண்டரை வருடங்களாக இவ்வாறு அரசியல்வாதிகள் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்து வருகின்றனர். தேர்தல் நடைபெறுவதாக இல்லை. ஏனெனில் தேர்தலை நடத்துவதற்கான தேவை அரசிடம்இல்லை.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல் நடத்துவதைவிட, புனித மக்கா நகரிலிருந்து அரசமரம் கொண்டுவருவது இலேசான விடயமாகும் – – என்றார்.
Post a Comment