
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
அவரின் கருத்துக்கு தனது உரையில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா.
தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
“வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டாரா என்று ஊடகங்கள் கேட்கின்றன. வடக்கு மாகாண சபைக்கு அடுத்த முதலமைச்சராவதற்குத் தகுதியானவராக கட்சியில் நீண்ட அரசியல் முதிர்ச்சியும், நீண்ட அனுபவமும் கொண்ட மாவை.சேனாதிராசாவே இருப்பார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுத்த அவரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவராக இருப்பார். அதற்கான அழைப்பு முன்வைக்கப்பட்டால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்”- என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராசா இந்தக் கருத்துக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
“வடக்கு மாகாண சபை நீண்ட எதிர்பார்ப்பில் அமைக்கப்பட்டது. தற்போது அரசமைப்புத் தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவு இறுதியானது அல்ல. அது தொடர்பில் மேலும் பல எதிர்பார்ப்புக்கள் உள்ளன. தற்போது முன்வைக்கப்படும் அரசமைப்பை நிராகரித்தால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிட்டுமா என்பது கேள்விக்குரிய விடயமே”- என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
Post a Comment