
இந்தப் பின்னணியில் சர்வதேச அணுசக்தி முகமை தலைவர் யுகியோ அமோனோ அண்மையில் ஈரானுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியபோது, அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் அரசு உறுதியுடன் பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
இதே கருத்தை ஐ.நா. அணு சக்தி மாநாட்டிலும் யுகியோ அமோனோ பேச வேண்டும் என்று ஈரான் அரசு வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை யுகியோ ஏற்கமறுத்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் அரசு, அபுதாபியில் நேற்று நடந்த ஐ.நா. சபையின் அணு சக்தி மாநாட்டை புறக்கணித்தது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மட்டுமன்றி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக செயல்படுகின்றன.
இதனிடையே ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் பேசியபோது, ஈரானிய விஞ்ஞானிகள் அதிநவீன ஏவுகணை ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து ஏவுகணை ஆராய்ச்சியை நிறுத்த முடியாது என்று தெரிவித்தார்.
Post a Comment