Ads (728x90)

அருணாச்சலப்பிரதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் லூன்சே கவுண்டியில் கிராமத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என்று மறுக்கும் திபெத் குடும்பத்தை சீன அதிபர் ஜின்பிங் பாராட்டியுள்ளார்.

இது எல்லைப்பகுதியில் எந்த வித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்ற சீன நிலைப்பாட்டின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் வாழும் மக்கள் சீன அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதனையடுத்து அதிபர் ஜின்பிங் அப்பகுதியை பாதுகாக்கும் அந்த திபெத் குடும்பத்தை வெகுவாக அவர் பாராட்டியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்லையில் இவர்கள் செய்யும் பங்களிப்பு மற்றும் சீன விசுவாசம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அம்மக்களுக்கு நன்றியையும் தெரிவித்தார் ஜின்பிங்.

“இந்தப்பகுதியில் அமைதி இல்லையெனில் இங்கு வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அமைதி ஏற்படாது” என்று கூறியுள்ளார் அதிபர் ஜின்பிங்

Post a Comment

Recent News

Recent Posts Widget