சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் மராட்டிய நடிகை வைபவி சாண்டல்யா. மராட்டியில் கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வரும் வைபவி, ஒரு அராபிக் படத்திலும் நடித்துள்ளார்.சந்தானம் ஜோடியாக சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்க அழைத்து வரப்பட்டார். அந்த படம் தாமதமாகவே சந்தானம் தனது அடுத்த படமான சக்க போடு போடு ராஜா படத்திலும் வைபவியை ஹீரோயின் ஆக்கிவிட்டார். தற்போது சக்க போடு போடு ராஜா அடுத்து வெளிவர இருக்கிறது. அதன் பிறகு சர்வர் சுந்தரம் வெளிவர இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடிவு செய்துள்ள வைபவி தீவிரமாக தமிழ் கற்று வருகிறார். இரண்டு படத்திலுமே வைபவிக்கு வலுவான கேரக்டர்கள் என்று கூறப்படுகிறது.
அடிப்படையில் நடன கலைஞரான வைபவி தான் நடித்த அராபிக் படத்தில் டான்சராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைபவி நடித்துள்ள ராஜ் விஷ்ணு என்ற கன்னடப் படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.
Post a Comment