Ads (728x90)

கேட்டலோனியா தனி நாடாக அறிவித்ததை எதிர்த்து ஸ்பெயினிலுள்ள பார்சிலோனோவில் ஆயிரக்கணக்கான கேட்டலோனியா மக்கள் பேரணி சென்றனர்.

வெள்ளிக்கிழமையன்று கேட்டலோனியா நாடாளுமன்றம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவில் ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா பிரிந்ததாக அந்நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர்.

இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் தனி நாட்டுக்கு ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா பிரிந்ததாக  அந்நாட்டுத் தலைவர்களால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு சுதந்திரம் அறிவித்துக்கொண்ட கேட்டலோனியா அரசை கலைத்து ஸ்பெயின் உத்தரவிட்டது.

இந்த நிலையில் பார்சிலோனாவில் தனிநாடாக அறிவித்த அந்நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக கேட்டலோனிய மக்கள் ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் ஸ்பெயின், கேட்டலோனியா கொடியை ஏந்திச் சென்றனர்.

இதுகுறித்து கேட்டலோனியா சிவில் சமூக தலைவர் அலெக்ஸ் ரமோஸ் கூறும்போது, "நாங்கள் இங்கு தாமதமாக கூடியுள்ளோம். ஆனால் நாங்கள் இனி பொறுமையாக இருக்கப் போவதில்லை. நாங்கள் எங்கள் பெரும்பான்மையைக் காட்ட இருக்கிறோம்" என்றார்.

கேட்டலோனியாவில் தற்போதைய நிலை காரணமாக அங்குள்ள தொழில் நிறுவனங்கள் ஸ்பெயினின் பிற பகுதிகளுக்கு மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்பெயின் மேற்பார்வையில் கேட்டலோனியாவுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு நியமிக்கப்படும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget