
ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நிறைவை ஞாபகப்படுத்தும் செயலமர்வு ஒன்று ஹட்டன் கிறிஸ்துவ தொழிலாளர் முன்னணியின் மண்டபத்தில் இலங்கை கம்னியூஸ்ட் கட்சியின் நுவரெலியா பிராந்திய பொறுப்பாளர் மோகன் சுப்பிரமணியம் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரஷ்ய புரட்சி ஒன்றுப்பட்ட சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை உருவாக்கும் வகையில் தோழர் வி.ஐ.லெனின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த புரட்சியானது பல நாடுகளுக்கு விரிவடைந்ததன் பின்பே பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு சக்தியாக அமைந்தது. அந்தவகையில் இலங்கையில் வாழ்கின்ற மக்களும் இந்த ரஷ்ய புரட்சியின் ஊடாகவே விடுதலையும் உரிமை பெற்றவர்களாகவும் வாழ்கின்றனர்.
ரஷ்ய புரட்சி இலங்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஊடகங்களுக்கு கூட சரியாக தெரியாது. யாழ்ப்பாணத்தில் முதல் முதலாக ரஷ்ய புரட்சியின் பிரகடனத்தை 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தினால் கொண்டு வரப்பட்டது.
தமிழர்கள் ஆகிய நாங்கள் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் சக்தியுடன் போராடக்கூடிய எமது நண்பர்கள் ரஷ்யாவில் இருக்கின்றார்கள் என லெனினை சுட்டிக்காட்டிய இவர் இவரின் ஆதரவைக் கொண்டு எமது உரிமையை வென்றெடுக்க நாம் தயங்க மாட்டோம் என்றார்.
ரஷ்ய புரட்சியை உலக நாடளவில் பரவ செய்த வி.ஐ.லெனின் முதல் கோரிக்கையாக அனைத்து நாட்டு மக்களும் நாடுகளும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது தான் இதனை கார்மார்க்ஸ் என்பவர் தனது புத்தகத்தில் ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய வழியினை மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டதாக சோசலிச ஆட்சியை உருவாக்கி லெனின் முன்னெடுத்த ரஷ்ய புரட்சி இந்திய மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அங்குள்ள பாட்டாளி வர்க்கத்தினருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது.
இந்தவகையில், 1917ம் ஆண்டு 75ம் ஆண்டு வரை நாம் நாட்டு மக்களும் சுதந்திரம் பெற்று வாழக்கூடிய வழி அமைந்ததோடு, ரஷ்ய புரட்சியின் ஊடாக இந்தியாவும் தமது சுதந்திர முன்னேற்ற பாதைக்கு இப் புரட்சியை பயன்படுத்தியது.
ஆகையால் சுதந்திர புரட்சியை முன்னெடுத்த லெனினுக்கு உலக நாட்டு தலைவர்களில் முதல் வாழ்த்து செய்தியில் சேர் பொன்னம்பலம் உட்பட இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி ஆகியோர் அனுப்பி வைத்தமை குறிப்பிடதக்கது என்றார்.
Post a Comment