விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் கால்ஷிட்டை எதிர்நோக்கி பல தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.அது வேறு ஒன்றுமில்லை ரட்சகன் படத்தை இயக்கிய ப்ரவீன் காந்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய் கோலா கம்பெனி விளம்பரத்திலும் நடிக்கின்றார்.
அதே சமயம் கத்தி படத்தின் வசனமும் பேசுகின்றார், இது மிகப்பெரிய கேவலமாக இல்லையா, அவரை பார்க்கும் போது எனக்கு கோபம் தான் வருகின்றது’ என மோசமாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வு விஜய் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விஜய் எப்போதோ நடித்த கோலோ விளம்பரத்திற்கும், தற்போது முடிச்சுபோடுவது எந்த விதத்திலும் நியாமில்லை என்றும் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment