
குறிப்பாக இடைக்கால அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்றக் குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு முன்னதாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டி கூட்டமைப்பாக கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.வலியுறுத்தியிருந்ததோடு கடந்த 19மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த பாராளுமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஐ.நா.விசேட அறிக்கையாளரின் பாராளுமன்ற வருகை மற்றும் அரசியலமைப்பு குறித்த சந்திப்புக்கள் இருந்ததன் காரணமாக கடந்த 19மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பாராளுமன்றக் குழக் கூட்டம் ஒத்தவைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையிலேயே தற்போது மேற்படி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டள்ளது. இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உட்பட பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ ஆகினவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளமையை அவ்வமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை எதிர்வரும் (28, 29) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30மணி முதல் மாலை 4 மணிவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் சந்தேகங்கள், புதிதாக இணைத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் குறித்த யோசனைகள் போன்றவற்றை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் அரசியலமைப்புச் செயற்பாடுகளில் பங்கேற்றுள்ள தமிழ் மொழி சார் சட்டத்தரணிகள் சிலர் பங்கேற்று விளக்க உரைகளை ஆற்றவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் வழிநடத்தல் குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை குறித்த மேலதிக தௌிவு படுத்தல்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேநேரம் குறித்த இரு நாள் கருத்தரங்கில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. துமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை மையமாக வைத்து தீர்மானத்தினை எடுத்துள்ள நிலையிலும் இடைக்கால அறிக்கை குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்த்தில் ஏகோபித்த தீர்மானமொன்று எட்டப்படாத நிலையிலும் இத்தகைய கருதரங்கில் பங்கேற்பதால் பயன் எதுவும் ஏற்படப்போவதில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புக் குறித்த வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் நவம்பர் முதலாம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment