
பொதுவாக நாம் பாரிய திட்டங்களை எமக்கு கிடைக்கின்ற நிதியில் நடைமுறைப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லை.எமக்கு கிடைக்கும் நிதியை வைத்து பால் கொள்வனவு செய்யும் பாத்திரங்களைத்தான் எம்மால் வழங்க முடியும். மக்களுக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டுமானால் நாம் மத்திய அரசுடன் இணைந்து பயனித்தாலே சாத்தியமாகும்.
கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நான் செய்யவிரும்பவில்லை. நான் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கொழும்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன். அப்போது மாகாண சபை கிடைக்கின்ற பாரிய திட்டங்கள் அனைத்தையும் சாக்குப்போக்கு காரணங்களை கூறி நிராகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டினார். அவர்கள் கூறுவது போல நாமும் பாரிய திட்டங்களை நிராகரித்து வருகின்றோம். இதனால் எமது பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியவில்லை. விவசாயத்துறையில் பல அனுகூலமான வேலைத்திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த திட்டங்களை நாம் நிராகரிக்காது. அவர்களுடன் இணைந்து நாம் பயணிக்க தீர்மானித்துள்ளோம். அண்மையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் அல்லது அரை மானியத்தில் விதை நெல்லை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு ஜனாதிபதி தனது பதிலில் இந்த திட்டத்துக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதனை வருட நிறைவில் கேட்கின்றீர்கள். இந்த திட்டத்தை முன்பே சமர்ப்பித்திருந்தால் நாம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்போம் என எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவது என தீர்மானித்துள்ளேன் என்றார்.
Post a Comment