Ads (728x90)


நடிகர்கள் : விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், கோவை சரளா.

இயக்கம் : அட்லீ

இசை : ஏ.ஆர்.ரகுமான்

தயாரிப்பு : தேனான்டாள் பிலிம்ஸ்

மருத்துவ துறையை தன் கையில் வைத்துக் கொண்டு தவறான வழியில் சம்பாதித்தவன் என்ன ஆனான் என்பதை சூடு பறக்க சொன்ன கதை தான் மெர்சல் படத்தோட ஒன் லைன்.

படம் தோடங்கும் போதே கடத்தல்கள், மருத்துவ மனையில் வேலை செய்யும் சில அடிபொடிகள், டாக்டர்கள் சிலர் கடத்தப்படுவதும், சிலர் கொல்லப்படுவதும் இதை எல்லாம் தனிப்படை போட்டு விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சத்யராஜ் இதற்கெல்லாம் காரணம் விஜய் தான் என்று கண்டு பிடித்து கைது செய்கிறார்.

போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. விஜய் மருத்துவ துறையில் இருப்பவர்களை ஏன் பொறி வைத்து பிடிக்கிறார் இதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிகதை..

கிராமத்து தந்தை, டாக்டர், மேஜிக் மேன் என இரு மகன்கள் என்று மூன்று கேரக்டர் களில்வித்தியாசமாக நடித்துள்ளார் விஜய்.

இது வரை இல்லாத அளவுக்கு மாஸ் பக்கா மாஸ் கதையாக மெர்சல் அமைந்துள்ளது. ஆர்பரிக்கும் டான்ஸ், அதகளபடுத்தும் வசனங்கள்.. அரசியல் வாசனை கொஞ்சம் இருந்தாலும் ரசிகர்களுக்கு கொஞ்சம் தீனி தான்

சமந்தா முழு நேர ஹீரோயினா தெறில வந்தவர் இந்த படத்தில் விஜய்காக சாதாரண சின்ன டிவி ரிப்போர்ட்டர் ரோலில் நடித்துள்ளார்.

மருத்துவருக்கு உதவியாளராக வெளிநாட்டு ஏரியாவில் கலக்கி இருக்கிறார் காஜல். காதலியாக வந்தாலும் மனைவியாக வந்தாலும் நம் மனதுக்குள் அப்படியே ஒட்டிக்கொள்வார் நித்யா மேனன். இந்த கிராமத்து பாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார்.

நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்தாலும் ஒரு சில நடிகர்கள் பேசும் வசனங்களுக்கு கைதட்டல் கிடைக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லன் என்றாலும் அவர் பேசும் வசனங்கள் நடிப்பு ரசிக்கும்படி உள்ளது. அவர் போட்ட அந்த வெள்ளை தாடி கெட் அப்போட ஒரு தைரியம் வேண்டும். சேவை என்பதை தாண்டி பணம் மட்டுமே தேவை என்ற மருத்துவ பல்டியை தன் நடிப்பால் விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து விருந்து வைத்துள்ளார் எஸ்.ஜே..

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் வடிவேல் கூட்டணி ஓகே.

ராஜா ராணி, தெறி என அட்லீயின் படங்களில் பழைய படங்களின் சாயல் தெரிந்தன. அது, மெர்சலில் தெரிந்தாலும் அதை வழக்கம் போல தனது இயக்கத்தால், படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் மெர்சல் காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்தேறும் மருத்துவ குறைகளை வேற கோணத்தில் சொல்ல முயற்சி செய்துள்ளனர். வேகம் குறைவாக தொடங்கும் கதை, விஜய் இரட்டை கேரக்டர்களில் ஆங்காங்கே சில குழப்பங்கள். இப்படி இதை எல்லாம் மைன்ட்ல வச்சிக்காம, மிரட்டும் சண்டை காட்சிகள், இசைப்புயலின் துள்ளல் இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு என்று பார்த்தால், மெர்சல் தீபாவளி டீரீட் தான்.



Post a Comment

Recent News

Recent Posts Widget