Ads (728x90)


கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திலீப் மட்டும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீப் மீது சுமார் 1300 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக திலீப் தனது மனைவி மஞ்சு வாரியாரை பிரிந்ததற்கு கடத்தப்பட்ட நடிகைதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது மனைவி காவ்யா மாதவனும், திலீபும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்தும் விஷயத்தை மஞ்சுவாரியாருக்கு சொன்னது கடத்தப்பட்ட நடிகை என்றும் அந்த கோபத்திலேயே திலீப் நடிகையை கடத்தி துன்புறுத்த திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடத்தலை அரங்கேற்ற 4 ஆண்டுகளாக திட்டமிட்டதாகவும், கடத்தல் கும்பலுக்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகவும் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடத்தப்பட் நடிகை தனது திருமண அறிவிப்பை வெளியிட்டதும் அதை தடுக்கும் நோக்கத்தில் கடத்தலை விரைந்து நடத்தி உள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிகையின் மூலம் திலீபின் முதல் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget