புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடுகள் செய்ய தயாராக இருக்கின்றனர். எனினும் ஊக்குவிப்பு கிடையாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று வியாழக்கிழமை இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது உரையில்,
அரசியலமைப்பில் மாற்றம் ஏற்பட்டாலும் தற்போது புதிய அரசியலமைப்பு தேவை என்பதை உணர்ந்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மலையக மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர். ஏனெனில் எமது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிமா- – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக மக்கள் பலவந்தமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
நாம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவிற்கு நன்றி கூற வேண்டும். அவர்தான் எம்மவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார். மலையக மக்கள் யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மீண்டும் யுத்தம் வராமல் பாதுகாக்க வேண்டும். இதன்படி இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதங்கள் மதிக்கப்பட வேண்டும். இதற்கு சிங்கப்பூர் உதாரணமாகும். இலங்கையில் மத ங்களையும் மொழிகளை யும் மதிக்கும் சூழல் வேண்டும்.
அரசியலமைப்பின் நிதி தொடர்பான உப குழுவில் நானும் இருந்தேன். பந்துல குணவர்தன அதன் தலைவராக இருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பினை தயாரிக்கவே ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வந்தாலும் சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமைதி கொண்டுவரப்பட வேண்டும். தற்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூன்று தலைவர்களும் இணைந்து அரசியலமைப்பை உருவாக்க முன்னிலை வகிக்கின்றனர். எனவே இன்று விட்டால் நாளை செய்ய முடியாது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முன்னின்று செயற்பட்டார். எனினும் அவர் அப்பகுதிகளில் வாழும் மக்களின் மனங்களில் உள்ள பிரச்சினைகளை இனங்காணவில்லை. ஆனால் இந்த பிரச்சினை தீர்க்க முடிந்திருந்தும் மஹிந்த ராஜபக் ஷ அதனை செய்ய தவறியிருந்தார். எனவே தேசிய பிரச்சினைக்கு அவர் தீர்வு வழங்கியிருந்தால் இன்றும் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
எனவே சிங்கள மக்களின் ஆதரவுடன் அரசியலமைப்பினை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் தற்போது தம்மின மோதல்கள் அதிகமாகும். மலையக தமிழர்கள் மோதுகின்றனர். வடக்கு, கிழக்கு மக்களுக்குள் பிரச்சினை. முஸ்லிம்களுக்குள் பிரச்சினைகள் உள்ளன. இது மாற வேண்டும். ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை மீது இன்னும் புலம்பெயர்ந்தவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. வெளிநாடுகளுக்கு சென்றால் எப்போது தமிழீழம் உருவாகும் என கோருகின்றனர். அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீட்டாளர்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் இடையூறாக உள்ளன.
நாட்டில் முதலீட்டாளர்களை ஊக்குவிப் பாளர்கள் இல்லை. புலம்பெயர்ந்தவர்கள் தமிழர்கள் முதலீடுகள் செய்ய தயாராக இருக்கின்றனர். எனினும் ஊக்குவிப்பு கிடை யாது. இதுபெரும் பிரச்சினையாகும். இனப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இதற்கு சிங்களவர்களின் ஆதரவு அவசியமாகும்.
Post a Comment