Ads (728x90)

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் மத ரீதி­யான கற்கை நெறி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தால் மத­வா­தி­களே தோற்­றம் பெறு­வார்­கள். எனவே எதிர்­கா­லத்­தில் மத ரீதி­யான கற்கை நெறி­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­நே­சன் சபை­யில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் செவ்­வாய்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் உயர் கல்வி மற்­றும் நெடுஞ்­சாலை மற்­றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­கள் மீதான குழு­நிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கிழக்கு மாகா­ணத்­தில் இது­வ­ரை­யில் சட்­ட­பீ­டங்­கள் எது­வும் இல்லை. கிழக்கு மற்­றும் தென்­கி­ழக்கு பல்­க­லைக் கழ­கங்­க­ளில் சட்­ட­பீ­டத்தை நிறு­வ­வேண்­டும்.
பல்­க­லைக் கழ­கங்­க­ளின் ஊடாக புத்­தி­ஜீ­வி­களை உரு­வாக்­கவே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். அதற்கு மாறாக மத­வா­தி­க­ளையோ அல்­லது இன­வா­தி­க­ளையோ உரு­வாக்­கி­வி­டக்கூடாது.

பல்­க­லைக் கழ­கங்­க­ளில் மதக் கற்கை நெறி­க­ளி­னால் மத­வா­தி­கள் தோற்­றம் பெறு­வ­தற்கு வாய்ப்­பு­கள் உண்டு. மத­நெறி கற்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கக்­கூ­டாது. மத ரீதி­யான கற்கை நெறி­கள் கல­வ­ரங்­கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கின்­றன.

பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­யா­ளர், உத­வி­யா­ளர்­கள் நிய­ம­னங்­க­ளின்­போது தகு­தி­யா­ன­வர்­களை நிய­மிக்க வேண்­டும். வெளிப்­ப­டை­தன்மை பேணப்­ப­ட­வேண்­டும். அர­சி­யல் தலை­யீடு இருக்­கக் கூடாது. இதற்கு அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget