வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக சீனா 2750 மெடரிக் டொன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது. அரிசியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்றது.சமீபத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசு மேற்கொண்டுள்ள வேலைத் திட்டத்துக்கு உதவும் வகையில் சீன அரசு அரிசியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதஷர்ன யாப்பா அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டீன் பெர்னாண்டோ ஆகியோரிடம் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷீயென்ககினால் 1000 மெற்றிக் டொன் அரிசி கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கு அரிசியை கையளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.
Post a Comment