Ads (728x90)

4 வருடங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான படம் குயின். இந்தப் படம் தற்போது தமிழில் பாரீஸ் பாரீஸ் என்ற பெயரில் ரீமேக் ஆகிவருகிறது. இதனை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்த கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கிறார். கதைப்படி காஜல் அகர்வால் திருமணம் நின்றதும் அவர் பாரீஸ் சென்று விடுவார் அங்கு அவருக்கு அறிமுகமாகும் அந்த நாட்டு தோழியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஹிந்தி படத்தில் இந்த கேரக்டரில் லிசா ஹைடன் நடித்திருந்தார்.

இதில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட எமி இப்போது படத்திலிருந்து விலகி விட்டார். படத்தில் காஜல் அகர்வாலுக்குத்தான் முக்கியத்தும் இருக்கிறது. அவரது தோழியாகத்தான் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் எமி நடித்துள்ள 2.0 படம் வெளிவர இருக்கிறது. அதற்கு பிறகு எமியின் மார்க்கெட் உயரும். அதன் பிறகு புதிய படங்களில் நடிக்கலாம் என்ற காரணத்துக்காகவும் அவர் இந்தப் படத்திலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget