பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள காரணத்தால் அடுத்த வருடத்தில் அதிகளவான நிலநடுக்கங் கள் ஏற்படும் என்று அமெரிக்கப் புவியியல் சார் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கடந்த 1900ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பூமியின் சுழற்சி வேகம் நுணுக்கமாக அவதானிக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகம் படிப்படியாகக் குறையக்குறைய நிலநடுக்கங்கள் ஏற்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தற்போது உள்ளதை விட அடுத்த வருடம் பூமியின் சுழற்சி வேகம் இன்னும் குறைவடையவுள்ளதால் இன்னும் அதிகளவான நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகை பகுதியில் நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்கப் புவியியல் சார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்தது.
Post a Comment