
நேற்று முன்தினம் நள்ளிரவு நெரிசல் அதிகமாகி பலர் மயக்கமடைந்தனர். குழந்தைகள் அழுதனர். குழந்தைகளையும், அவருடன் வந்தவரையும் போலீசார் சிரமப்பட்டு வெளியே அழைத்துவந்தனர். மயக்கமடைந்தவர்கள் ஸ்டிரெச்சரில் துாக்கி செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரையை சேர்ந்த பாலு,42, மயக்கடைந்து விழுந்தார். அவரை சன்னிதானம் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பம்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் இருந்த கூட்டம், நேற்று மதியத்துக்கு பின்னர் குறைந்தது. பம்பையில் பக்தர்கள் தடுக்கப்படாமல் சன்னிதானத்துக்கு அனுப்பப்பட்டனர். சன்னிதானத்தில் நெரிசலும் குறைந்தது.
Post a Comment