Ads (728x90)


தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழை விட தெலுங்கில் சிறந்த கதாபாத்திரங்களில், வெற்றிப் படங்களில் நடித்து அங்கு முன்னணியில் இருப்பவர். நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார் சமந்தா. அவரைத் தேடி இப்போதும் புதுப் பட வாய்ப்புகள் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்போது தமிழில் நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்து வருகிறார். 1985ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் இப்படத்தின் கதையில் சமந்தா கிராமத்துப் பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கியிருக்கின்றன.

கிளாமர் இல்லாமல் கருப்பான மேக்கப்புடன், பாவாடை தாவணியில் உள்ள சமந்தாவின் தோற்றமும், அந்தப் புகைப்படங்களும் மிகவும் இயல்பாக அமைந்துள்ளன. தெலுங்குத் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் 'ரங்கஸ்தலம்' படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் இப்படம் வெளியாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget