Ads (728x90)

யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாஹ் மகன் ஆஸ்டினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக திகழ்ந்த ஸ்டீவ் வாஹின் மகன் ஆஸ்டின் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்டின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். கேப்டனாக ஜேசன் சங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்டின் மகன் வில் சுதர்லேண்ட் துணை கேப்டனாக இடம் பெற்றுள்ளார். 3 வார காலம் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ரேயான் ஹாரிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜனவரி 14-ம் தேதி இந்தியாவை சந்திக்கிறது. 17-ம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும், 19-ம் தேதி நியூ கினியா அணியுடனும் மோதுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget