பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த, இளவரசர் ஹாரி, 33, அமெரிக்க, 'டிவி' நடிகை, மெகன் மார்க்லேயை, 36, மே 19-ம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர், இளவரசர் பிலிப்பின் மகன், சார்லஸ் - டயானா தம்பதி இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க, 'டிவி' நடிகை மெகன் மார்க்லேக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவர்களின் திருமண தேதி வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் 2018-ம் ஆண்டு மே. 19-ம் தேதி கென்சிங்டன் அரண்மணையில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment