தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்துள்ள ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ், இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்குவார் என இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின் போது 111 ரன்கள் விளசியாய ஏஞ்சலோ மேத்யூஸ், தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும்.
கடைசி ஒருநாள் போட்டியில் அவர், களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வலை பயிற்சியில் மேத்யூஸ் பங்கேற்றார். பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு சில ஓவர்கள் பந்தும் வீசினார்.
இதுதொடர்பாக இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறும்போது, “ மேத்யூஸ் உடல் தகுதியுடன் உள்ளார். மொகாலி ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். தொடரை தீர்மானிக்கும் விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டிக்கு அவர் தயாராக உள்ளார். ஒட்டுமொத்த அணியில் உள்ள 15 வீரர்களும் முழு உடல்தகுதியுடன் தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
Post a Comment