Ads (728x90)

பாகுபலி நாயகன் பிரபாஸ், பாகுபலி-2 படம் வெளியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, பாகுபலி பட நாயகியான அனுஷ்காவும், பிரபாசும் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், அதையடுத்து அந்த செய்தியை அவர்கள் இருவருமே மறுத்தனர்.

இந்த நிலையில், தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வரும் பிரபாஸ், தனது வருங்கால மனைவி குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனக்கு அழகான பெண் வேண்டும் என்று நான் விரும்பவில்லை. செயற்கைத்தனம் இல்லாத நல்ல குணம் கொண்ட பெண் தான் முக்கியம். அந்த மாதிரியான பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் பிரபாஸ்.

Post a Comment

Recent News

Recent Posts Widget