
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தி வருகின்றன.
யாழ்ப்பாணத்தில், சங்கானை பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக்குழு கட்டுப் பணம் செலுத்தியிருந்தது.
இந்த நிலையில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக் குழு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. மேலும், சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சியும் நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும், மக்கள் விடுதலை முன்னணியும் நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தின.
மன்னார் மாவட்டத்தில் பொதுமக்கள் முன்னணி அனைத்துச் சபைகளிலும் போட்டியிடுவதற்கு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி நானாட்டான் பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.
Post a Comment